நாகாலாந்து கவர்னரும், முன்னாள் பாஜக தலைவருமான இல. கணேசன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு, துறையூர் பாஜக நகர தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.