திருச்சி நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த கோகிலா என்பவர் நேற்று முந்தினம் (நவ.2) இரவு மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக, விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ராமநாதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.