திருச்சியில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அண்ணல் மகாத்மா காந்திஜி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்று இன்றுடன் (டிசம்பர் 26) நூறு ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து அவரது உருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம். சரவணன் தலைமையில் வழக்குரைஞர் பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் செந்தில்நாதன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பஜார் மைதீன், பாலக்கரை மாரியப்பன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்நிகழ்வில் வழக்குரைஞர் பிரிவு நிர்வாகிகள் மாநில செயலாளர் கிருபாகரன், விக்னேஷ், சுப்பிரமணி, ஆறுமுகம், சுருதி, அமிர்தா, சுகன்யா, சரவணகுமார், கள்ளிக்குடி சேட்டு, இளைஞர் காங்கிரஸ் கம்பை பாரத், ஜிம் விக்கி, ஆசிப், அப்சர் உறையூர் இர்பான், யாகியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி