திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த லியாகத்அலி என்பவர் தனது பைக் காணாமல் போனதாக பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், முதலியார் சத்திரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (24) மற்றும் பீமநகர் கூனி பஜார் சவேரியார் கோவில் தெருவைச் சேர்ந்த ஜேக்கப் ஸ்டீபன் (24) ஆகிய இருவர் மோட்டார் சைக்கிளை திருடியது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கேகே நகர் காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்தனர்.