துறையூர் கோட்டம் செயற்பொறியாளர் திரு. பொன். ஆனந்தகுமார்-எம். இ அவர்கள், மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 06. 11. 2025 வியாழக்கிழமை அன்று துறையூர் மற்றும் புத்தனாம்பட்டி துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார். இதனால் துறையூர், முருகூர், கோணப்பாதை, சிறுநத்தம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடைபடும்.