மணப்பாறை விராலிமலை சாலையில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான கார் நிற்காமல் சென்றதால் துரத்திச் சென்றனர். போலீசார் நெருங்கியதும் காரை நிறுத்திவிட்டு அதில் வந்தவர்கள் தப்பி ஓடினர். காரை சோதனை செய்ததில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா இருப்பது தெரியவந்தது. போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.