முசிறி காட்டுப்புத்தூர் அருகே மாமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன், எழுதுப்பட்டி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது நிலைத்தடுமாறி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் சம்பவ இடத்தில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.