திருவரம்பூர் பகுதியில் லாட்டரி விற்ற 14 பேர் கைது

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுவதாக திருச்சி எஸ்பி தனிப்படை போலீஸ்க்கு தகவல் கிடைத்தது. 

அதன் அடிப்படையில் திருவரம்பூர் மலைக்கோயில் லட்சுமி நகரைச் சேர்ந்த சண்முகம், தெற்கு காட்டூர் ஜோதிபுரத்தைச் சேர்ந்த கருணாநிதி, அதே பகுதியைச் சேர்ந்த மீனாட்சி, சுந்தரம் மற்றும் ஆனந்தராஜ், கவிதா அரியமங்கலம் சீனிவாசன் நகரைச் சேர்ந்த செல்வி உள்ளிட்ட ஆறு பேரையும் திருச்சி எஸ்பி தனிப்படை போலீசார் கைது செய்து திருவரம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி