திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில், சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் தனது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக தங்கத் தொட்டிலை காணிக்கையாக வழங்கினார். இந்த தங்கத் தொட்டிலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.