திண்டுக்கல் மாவட்டத்தில், சாலையில் சென்ற அரசுப் பேருந்தில் டயர்கள் கழன்று ஓடிய சம்பவம் பயணிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் பின் டயர், திடீரென கழன்று பேருந்தின் முன் ஓடியுள்ளது. இதனால் சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் முருகன், பேருந்தை நிறுத்தினார். இதனால், பேருந்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். விபத்து குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி: NewsTamilTV24x7