கர்ப்பிணிகள் மனநல பிரச்னைகளை தவிர்க்க முதலில் போதுமான ஓய்வு மற்றும் தூக்கம் அவசியம். குடும்பத்தினர் ஆதரவு, அன்பான உரையாடல்கள் மன அழுத்தத்தை குறைக்கும். சத்தான உணவு, தினசரி லேசான உடற்பயிற்சி, தியானம் போன்றவை மனதை அமைதியாக வைத்திருக்க உதவும். தேவையற்ற கவலைகளை தவிர்த்து, நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். மனஅழுத்தம் அதிகமாக இருந்தால் மருத்துவர் அல்லது ஆலோசகரின் உதவியை பெறுவது முக்கியம்.