மீனவ கிராமங்களில் மீன்வள கணக்கெடுப்பு பணி தொடக்கம்:

இந்தியாவின் கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவ கிராமங்களில், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய மீன்வள கணக்கெடுப்பு நிறுவனம் இணைந்து தேசிய கடல் மீன்வள கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் இனிகோநகர் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் ஈடுபடும் மீன்பிடி முறைகள், படகுகள், வலைகள், உள்கட்டமைப்பு வசதிகள், மீன் பதனிடும் தொழிற்சாலைகள், ஐஸ்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள், படகு கட்டும் தளங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் என சுமார் 170 கேள்விகள் கேட்கப்பட்டு விரிவான விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த கணக்கெடுப்பு, மீனவர்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் மீன்வளத்துறையின் வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இந்தப் பணி நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி