தூத்துக்குடி மாவட்டத்தில் 2025–2026 ரபி பருவத்திற்கான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் சேமா ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் மூலம் செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார். உளுந்து, பாசிப்பயறுக்கு நவம்பர் 15, மக்காசோளம், பருத்திக்கு நவம்பர் 30, சோளம், நிலக்கடலைக்கு டிசம்பர் 16, கம்பு, எள்ளு, சூரியகாந்திக்கு டிசம்பர் 30, நெல்லுக்கு ஜனவரி 31, 2026 கடைசி தேதிகளாகும். ஒரு ஹெக்டருக்கு ரூ. 304 முதல் ரூ. 1334 வரை பிரிமீயத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ஆதார் அட்டை, பயிர் சாகுபடி அடங்கல் ஆவணங்களுடன் கூட்டுறவு வங்கி அல்லது பொது சேவை மையங்கள் மூலம் காப்பீடு செய்து பயன்பெறலாம்.