திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு, அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள், சுமார் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி