தூத்துக்குடியில் மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் தி ஜிம்கானா கிளப் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான கைப்பந்து போட்டி ஆகஸ்ட் 11 முதல் 13 வரை நடைபெற்றது. இதில் மாணவர்கள் பிரிவில் 27 அணிகளும், மாணவிகள் பிரிவில் 24 அணிகளும் பங்கேற்றன. பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அன்னை ஜுவெல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் முருகானந்தம் மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினர்.