தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீமூலக்கரை ஊராட்சியில் 79வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு. க. இளம்பகவத் தலைமையில் இன்று (15.08.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி. ஐஸ்வர்யா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். கிராமசபைக் கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் உள்ளூர் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.