தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் கணேசன் (29), நெல்லை அருகே தாழையூத்தில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பும்போது, பொட்டல்விலக்கு பகுதியில் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த அறிவிப்பு பலகையில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.