தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில், நடிகர் ஜி.பி. முத்துவின் மகன்கள் சாலையின் ஓரமாக சைக்கிள் ஓட்டியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஜி.பி. முத்து, அவரது மனைவி அஜிதா, தம்பி மனைவி அனிதா, தந்தை கணேசன் ஆகியோர் சேர்ந்து முத்து மகேஷ் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பால அமுதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் ஜி.பி. முத்து உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.