கிணற்றில் குளிக்க சென்றபோது தவறி விழுந்து பெண் சாவு

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற காந்திமதி (48) என்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்தார். நேற்று காலை நடந்த இச்சம்பவம், மதியம் கிணற்றில் உடல் மிதந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வெளிச்சத்திற்கு வந்தது. கயத்தாறு போலீசார் மற்றும் கழுகுமலை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி