சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிகள் துவக்கம்:

தூத்துக்குடி மாவட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் 04.11.2025 முதல் 04.12.2025 வரை நடைபெறுகின்றன. மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் இப்பணியை நேரில் பார்வையிட்டார். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் விவரங்களைச் சேகரித்து வருகின்றனர். இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டைப் பெயர்கள் கண்டறியப்படும். தூத்துக்குடி தொகுதியில் 2,87,477 வாக்காளர்களுக்கும், ஒட்டப்பிடாரம் தொகுதியில் 2,55,197 பேருக்கும் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 14,90,657 வாக்காளர்களுக்கு S.I.R படிவங்கள் வழங்கப்படும். 2200-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி