தூத்துக்குடி மாவட்டத்தில், 22.08.2025 முதல் 31.08.2025 வரை 10 நாட்களுக்கு 'ஆறாவது புத்தகத் திருவிழா 2025' நடைபெறவுள்ளது. தருவை மைதானத்தில் 100 புத்தக ஸ்டால்கள் அமைக்கப்படும். புகைப்படப் போட்டி, கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கான போட்டிகளும் நடத்தப்படும்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள், பேச்சாளர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர். பொதுமக்கள் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அழைப்பு விடுத்துள்ளார்.