“இது OYO அல்ல” - வாடிக்கையாளர்களை எச்சரித்த ஆட்டோ ஓட்டுநர்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், ஆட்டோ ஓட்டுநர் ஒட்டிய போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த ஆட்டோவில் ஒட்டப்பட்ட அறிவிப்பில், "எச்சரிக்கை.. ரொமான்ஸ் வேண்டாம். இது ஒரு டாக்ஸி, எங்கள் தனிப்பட்ட இடம், OYO அல்ல. எனவே தயவுசெய்து விலகி அமைதியாக இருங்கள். மரியாதை கொடுத்து மரியாதை எடுத்துக் கொள்ளுங்கள்” என குறிப்பிட்டு கீழே, ‘மனு மில்கி’ என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி