இதுதான் குஜராத் மாடல் - பீட்டர் அல்போன்ஸ் விமர்சனம்

குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கான குஜராத் மாநில அரசின் வீட்டு வசதி திட்டத்தில், 462 குடியிருப்புகள் உள்ள ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் ஒரு வீட்டினை இஸ்லாமிய பெண் ஒருவருக்கு ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்ய வலியுறுத்தி அங்கே குடியிருக்கும் இந்து சமூக மக்கள் போராடுவது தான் குஜராத் மாடல் என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் வாழ்ந்து தொழில் செய்யும் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் குஜராத் மாநிலத்தை சார்ந்தவர்களே. அந்த நாடுகளைச் சார்ந்த மக்கள் இந்தியர்களுக்கு வசிக்க வீடுகள் தரமாட்டோம் என்று போராடத் துவங்கினால் நம் நிலைமை என்ன ஆகும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி