மன்னார்குடியில் ஒயர் திருடிய இருவர் கைது

மன்னாா்குடி மேலப்பாலம் அருகே தனியாா் வாடகை லாரிகள் நிறுத்தும் இடத்தில் உள்ள மின் மோட்டாரில் இணைக்கப்பட்டிருந்த 25 மீட்டா் மின் வயரை மா்ம நபா்கள் திருடி சென்றதாக மன்னார்குடி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் மன்னாா்குடி அடுத்த வாஞ்சியுரை சோ்ந்த 18 வயது சிறுவன், காலணி தெருவைச் சோ்ந்த கதிரவன் ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்து மன்னாா்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறுவனை தஞ்சை சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா், கதிரவனை மன்னாா்குடி கிளைச்சிறையில் அடைத்தனா்.

தொடர்புடைய செய்தி