பக்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வடுவூர் கிராமத்தைச் சேர்ந்த அபினேஷுக்கு, தவெக சார்பில் திருவாரூர் மேற்கு மாவட்ட செயலாளர் யுவி எம் ராஜா தலைமையில் கட்சி நிர்வாகிகள் அவரது இல்லத்திற்குச் சென்று சால்வை அணிவித்தும், ஆள் உயர மலர் மாலை அணிவித்தும் பாராட்டுகளைத் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் அபினேஷ் மற்றும் அவரது தாயார் கௌரவிக்கப்பட்டனர்.