மன்னார்குடியை சேர்ந்த குணசேகரன், அவரது மகன் ஆனந்த் மற்றும் நாவல்பூண்டியை சேர்ந்த வாணிதாசன் ஆகியோர் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் உடனடியாக வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, ரூ.40 லட்சம் மோசடி செய்துள்ளார். பின்னர் போலீசார் வாணிதாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான குணசேகரன் மற்றும் அவரது மகன் ஆனந்த் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.