திருவள்ளுர் மாவட்டம் கொப்பூர் கிராமத்தில் தமிழ்ஒளி (23) என்ற இளைஞரின் பிறந்தநாள் அன்று, அவரது நண்பர்களான அருள் (23), கனிஷ்கர் (20) மற்றும் 17 வயதுடைய இருவர் என 5 பேர் சேர்ந்து பட்டாக்கத்தியில் கேக் வெட்டி, நாட்டு வெடிகுண்டுகளை கொளுத்தி வீசி பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். இதன் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதால், மணவாள நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். 17 வயதுடைய இருவர் எச்சரிக்கையுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மற்ற 3 பேர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.