கல்லறை திருநாள் அனுசரித்த கிறிஸ்தவர்கள்

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் ஊராட்சியில் கத்தோலிக்க மற்றும் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவர்கள் கல்லறைத் திருநாளை அனுசரித்தனர். இதையொட்டி, கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளை சுத்தம் செய்து, சுண்ணாம்பு அடித்து, வர்ணம் பூசி தயார் செய்தனர். குடும்பம் குடும்பமாக கல்லறைத் தோட்டங்களுக்குச் சென்று மலர் மாலைகள் அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி, முன்னோர்களுக்குப் பிரார்த்தனை செய்து அஞ்சலி செலுத்தினர். கத்தோலிக்க பங்குத்தந்தையர்கள் புனித நீர் தெளித்து அஞ்சலி செலுத்தினர். திருவள்ளூர், பழவேற்காடு, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களை நினைவுகூர்ந்து கல்லறைகளில் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி