திருத்தணி அக்கைய நாயுடு சாலையில் அமைந்துள்ள தணிகாசாலம்மன் ஆலயத்தில் இன்று காலை எட்டு மணி அளவில், ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பல திரவியங்களால் அபிஷேகமும் மலர் அலங்காரமும் நடைபெற்றது. பின்பு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.