திருத்தணி: கொட்டும் மழையிலும் கச்சேரியை ரசித்த பக்தர்கள்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நடைபெற்ற 5 நாள் தெப்பத் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், உற்சவர் முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சரவணப் பொய்கையில் ஐந்து சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் பாடகர் வேல்முருகனின் பக்தி இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மழையிலும் நனைந்தபடி சாமி தரிசனம் செய்து கச்சேரியை ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி