திருத்தணி பேரூர் ஹரிகோபால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் கலந்துகொண்டார். பொதுமக்கள் குடும்ப அட்டை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட 46 அரசு சேவைகளுக்கு மனு அளித்தனர். மனுக்கள் பெறப்பட்டவுடன், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுத் திட்ட அட்டை மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துகள் அடங்கிய தொகுப்பு உடனடியாக வழங்கப்பட்டது.