அப்போது திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோவில் அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி மோதியதில் பிரியா லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார், அவர் கணவர் அன்பழகன் காயமடைந்து மதுரவாயில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்,
பலியான பிரியா உடல் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது, விபத்து ஏற்படுத்திய மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் தனசேகரனை பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், திருமழிசையில் கணவன் கண் முன்னே மனைவி லாரி மோதி பலியான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ஏற்படுத்துள்ளது,