திருவள்ளூர் நகராட்சி முகமது அலி தெருவைச் சேர்ந்த வழக்கறிஞர் கல்யாணசுந்தரம், அக்டோபர் 31ம் தேதி இரவு 9 மணியளவில், தனது வீட்டுமனைப் பிரிவில் மது அருந்திவிட்டு சத்தம் போடுவதாக வந்த தகவலின் பேரில் அங்கு சென்றார். அடையாளம் தெரியாத நான்கு பேர் மது அருந்திக் கொண்டிருந்ததைக் கண்ட அவர், பெண்களும் குழந்தைகளும் வசிப்பதாகக் கூறி அவர்களைக் கேட்டபோது, அவர்களில் ஒருவரான ஜானி மற்றும் அவரது நண்பர்கள் கல்லை எடுத்து வழக்கறிஞரின் தலையில் தாக்கி, காரின் கண்ணாடிகளை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காயமடைந்த வழக்கறிஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.