திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள பழைய பேரூராட்சி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இங்கு ப்ளீச்சிங் பவுடர் போன்ற பழைய பொருட்கள் குவிந்துள்ளன. உடைந்த ஜன்னல் சுவரை மூங்கிலால் கட்டி வைத்துள்ளனர். மேலும், மதுபான பாட்டில்கள் சிதறிக்கிடக்கின்றன. மழைநீர் தேங்கி டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் அவலமும் பேரூராட்சி வளாகத்திலேயே நிலவுகிறது. பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மருத்துவமனைக்கு அருகிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.