சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த 72நாட்கள் காணிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், கடந்த 72 நாட்களாக பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூபாய் 81 லட்சத்து 715, தங்கம் 89 கிராம், வெள்ளி 5 கிலோ 903 கிராம் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இக்கோவிலில், வேண்டுதல் நிறைவேற நெய்தீபம் ஏற்றி வழிபடுவது பக்தர்களின் நம்பிக்கையாகும். இந்த உண்டியல் எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி