திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் பெய்த கனமழையால் ஆறு, ஏரிகள் நிரம்பி வழிகின்றன. கடம்பத்தூர் ஒன்றியத்தின் பிஞ்சிவாக்கம் கிராமத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை கடல் போல் காட்சியளிக்கிறது. உபரி நீர் வெளியேற்றப்படும் இந்த தடுப்பணையில், ஆபத்தை உணராமல் பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள், கூட்டமாக குளித்து வருகின்றனர். கடந்த ஆண்டு இதே தடுப்பணையில் குளித்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.