சென்னை கோயம்பேட்டில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று, 38 இடங்களில் 32 ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு 10 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மதுரவாயல்-சென்னை துறைமுகம் இரட்டை அடுக்கு மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். அதிமுக-பாஜக கூட்டணி வலுவாக இருப்பதாகவும், பதவி கிடைக்காதவர்கள் திமுகவில் இணைவதாகவும், திமுகவில் இருந்து பலர் பாஜகவில் இணைய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் தகுதிக்கேற்ப பதவி உயர்வு வழங்க வலியுறுத்தினார்.