மாதவரத்தில் கட்சியினரை முடுக்கிவிட்ட முன்னாள் அமைச்சர்

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் சட்டசபை தொகுதியில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அண்ணா திமுக சார்பில், மாவட்ட செயலாளரும் முன்னாள் பால்வளத்துறை அமைச்சருமான வி. மூர்த்தி தலைமையில், புதிதாக பொறுப்பு ஏற்றவர்களுக்கு சால்வை அணிவித்து அறிமுகம் செய்யும் கூட்டமும், அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தல் பணிக்கான ஆலோசனை கூட்டமும் இன்று காலை மாதவரத்தில் நடைபெற்றது. இதில், மாதவரம் மண்டலம், புழல், சோழவரம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நாரவாரிக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பிரிவுகளிலும் உள்ள 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாவட்ட செயலாளர் மாதவரம் மூர்த்தி உட்பட முக்கிய நிர்வாகிகள், தங்களின் பொறுப்பு மற்றும் கட்சிப் பணிகளை எப்படி செயல்படுத்துவது, புதியவர்கள் எப்படி செயல்பட வேண்டும், மற்றும் 2026 சட்டசபை தேர்தலில் மாதவரம் தொகுதியில் அண்ணா திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது குறித்த தங்களது அனுபவங்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி