திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா 3 லட்சம் ரூபாய் வீதம் 12 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சாமு நாசர் வழங்கினார். மேலும், 198 வீடுகள் 11.42 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருவதையும், விரைவில் முதல்வர் திறந்து வைப்பார் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 103 முகாம்களில் 10,469 இலங்கைத் தமிழர் அகதிகளுக்கு 670 கோடி ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்டி ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு தமிழக அரசு அனைத்து வசதிகளையும், நலத்திட்டங்களையும் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.