ஆரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பு: பொதுமக்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் லட்சுமிபுரம் தடுப்பணைக்கு செல்லும் ஆரணி ஆற்றில், பொன்னேரி நகராட்சி பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

நாளொன்றுக்கு 6 லட்சம் லிட்டர் கழிவுநீரை குழாய் மூலம் கலக்க எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் தனிப்பிரிவு முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் ராட்சச குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது. 

எதிர்ப்பில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி