கஞ்சா கடத்தி வந்த கர்நாடக மாநில இளைஞர் கைது

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் சர்மா (30) என்பவர் 10.5 கிலோ கஞ்சாவுடன் செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் தடுப்பு சோதனையின் போது இவர் பிடிபட்டார். இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி