அங்கன்வாடி ஊழியர்கள் மாநிலம் தழுவிய மாலை நேர ஆர்ப்பாட்டம்

திருவள்ளூரில் தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர் சங்கத்தினர் மாநிலம் தழுவிய மாலை நேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட அவர்கள், அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்க வேண்டும், குடும்ப வரன்முறைக்கு உட்பட்டு ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும், பணிக்கொடையை முறையே 10 லட்சம் மற்றும் 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிப்பட்டு, திருத்தணி, ஆர்.கே.பேட்டை, எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, பூவிருந்தவல்லி, ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி