திருநெல்வேலி: மருத்துவமனையில் கர்ப்பிணி தற்கொலை

கல்லிடைக்குறிச்சி அருகே  8 மாத கர்ப்பிணியான ரஞ்சிதா (24),  பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்துள்ளார். மருத்துவமனை அறையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், கழிவறைக்கு செல்வதாகக் கூறிச் சென்றவர் வெகுநேரமாகியும் திரும்பாததால், மருத்துவமனை ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தபோது, துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. பாளையங்கோட்டை போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி