நெல்லையில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றி தரக்குறைவாக பேசிய செந்தில் ராஜை கைது செய்யக்கோரி இன்று (டிச.27) ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நெல்லையை சேர்ந்த பூலிதேவர் மக்கள் முன்னேற்ற கழகம், பசும்பொன் நேதாஜி அறக்கட்டளை ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.