திசையன்விளை பஜாரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பெயரில் சாலைப்போக்குவரத்து தொழிலாளர்களின் அடையாளத்தை அழிக்க நினைப்பதாகக் கூறி, நெடுஞ்சாலைத்துறையைக் கண்டித்தும், டோல்கேட் கொள்ளையைத் தடுத்து நிறுத்தக் கோரியும் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் மரிய ஜான் ரோஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.