நெல்லை மாநகர திமுக நிர்வாகிகள் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று மாநகர திமுக அலுவலகத்தில் வைத்து நடைபெறுகிறது. பேட்டை பகுதி செயலாளர் நமச்சிவாய என்ற கோபி தலைமையில் நடைபெறும். கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் எம்எல்ஏ முன்னாள் அமைச்சர் மைதீன்கான் மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் மாலை ராஜா மாநகராட்சி மேயர் சரவணன் துணை மேயர் ராஜூ உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். எனவே மாநகர பகுதி கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளும்படி மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன் அழைப்பு விடுத்துள்ளார்.