மேலப்பாளையம் 45வது வார்டுக்குட்பட்ட நவாப் பள்ளிவாசல் இடத்திலுள்ள சமுதாயநலக்கூடம் பொதுநிதியில் இருந்து 12.90 லட்சம் மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 18.00 லட்சம் என மொத்தம் 31 லட்சத்தில் கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மேலப்பாளையம் மண்டல சேர்மன் கதீஜா இக்லாம் பாசிலா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.