நெல்லை டவுன் கண்ணன் சாலையில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் புதிய மதுக்கடையை, மக்கள் நலன் கருதி தமிழக அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்து, மக்கள் நடமாட்டம் இல்லாத வேறு இடத்திற்கு மாற்றக் கோரி தமிழ்நாடு தேவேந்திரகுரல வேளாளர் உறவின்முறை சார்பில் ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மதுக்கடை காலை 11 மணி முதல் இரவு 11 மணிவரை செயல்பட்டு வருகிறது.