நெல்லையில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

களக்காடு பகுதியில் கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட சிங்கிகுளத்தை சேர்ந்த வானுமாமலை (எ) குறளி (38) என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகக் கூறப்பட்டது. அதேபோல், வீரவநல்லூரில் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய கட்ட இசக்கி (42) என்பவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி