நெல்லையில் இன்று மின்தடை அறிவி்ப்பு

வள்ளியூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் வளன் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, கோட்டைகருங்குளம் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், இன்று (வியாழன்) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழை தோட்டம், சீலாத்தி குளம், முடவன் குளம், தெற்கு கள்ளிகுளம், சமூக ரெங்கபுரம், திருவெம்பலாபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி